சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளியான செய்தி தவறு!

CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளியான செய்தி தவறு என சி.பி.எஸ்.இ விளக்கமளித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 11 மற்றும் 13ம் தேதிகளில் வெளியிடப்படும் என தகவல் வெளியானது. இந்தநிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளியான செய்தி தவறு என்றும், இன்னும் தேர்வு முடிவுகளுக்கான தேதி தொடர்பான அறிவிக்கை சி.பி.எஸ்.இ வெளியிடவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சி.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையளம் அல்லது சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version