குற்றாலத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள படகு சவாரி

குற்றாலத்தில் படகு சவாரி துவக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு ஜூன் ஜூலை ஆகஸ்டு, ஆகிய மாதங்களில், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை மிக அதிகமாகவே காணப்படும். சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்கள், அருவி என இருந்தாலும், குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் வழியில் அமைந்துள்ள வெண்ணைமடை குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக கடந்த சனிக்கிழமை அன்று படகு சவாரி திறக்கப்பட்டது. தனி நபர் படகுக்கு 95 ரூபாயும், 2பேர் படகு சவாரிக்கு 120 ரூபாயும், 4 பேர் படகு சவாரிக்கு 150 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் படகு சவாரி செய்து வருகின்றனர். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பு உடை அணிந்த பின்னரே படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Exit mobile version