நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கல்வித்துறை தொடர்பாக நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் 4 இடங்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தில் இடையப்பட்டி, சிவகங்கை மாவட்டத்தில் இலுப்பைக்குடி, கோவை மாவட்டத்தில் கிட்டாம்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பேட்டை என 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்பட உள்ளன.