உலகிலேயே முதல்முதலாக 2020 புத்தாண்டை, நியூசிலாந்து மக்கள் வரவேற்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடு நியூசிலாந்து என்பதால், உலகில் முதல்முதலாக அங்கு புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்து நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். இதற்காக ஆக்லாந்து நகரில் ஒன்று கூடிய மக்கள் நள்ளிரவு 12 மணி ஆனதும், ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர்.