4வது டி20 போட்டி: நியூசி. பந்துவீச்சு – சாம்சன், சைனிக்கு வாய்ப்பு

இந்திய அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இருபது ஓவர் தொடரை  கைப்பற்றிய இந்திய அணி, 4வது போட்டியில் சில மாற்றங்கள் செய்துள்ளது. ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது ஷமிக்கு பதிலாக இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், காயம் காரணமாக கனே வில்லியம்சன் ஆடாததால் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் சவுதி அணியை வழிநடத்த இருக்கிறார்.

Exit mobile version