இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில், இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ரஹானே அதிகபட்சமாக 46 ரன்களை எடுத்தார். இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2 நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட் எடுத்து ஆடி வருகிறது.