1290 சதுர அடி மனித தோலை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் இருக்கும் வெள்ளை தீவில் கடந்த திங்கட்கிழமை எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. அப்போது அங்கிருந்த 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் எரிமலை வெடிப்பால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் 9 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக நியூசிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பதாகவும் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 22 பேரும் இந்த எரிமலை வெடிப்பால் நடந்த ரசாயன மாற்றங்கள் காரணமாக அவர்களுடைய மேல்தோல் 90% கருகி விட்டதாகவும் அவர்களுக்கு மாற்று சிகிச்சை அளிக்க அதிக அளவிலான மனித தோல்கள் தேவைப்படுவதால் அமெரிக்காவிடம் 1290 சதுரடி மனித தோல்களை வாங்குவதற்காக நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் 13 வயதிலிருந்து 22 வயதுக்குள் உள்ளதால் மீண்டும் இவர்கள் தங்கள் பழைய நிலையை அடைய 500 மணி நேரம் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை தீவில் இருக்கும் எரிமலை மீண்டும் வெடிக்கக் கூடிய அபாயம் இருப்பதால் அந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

Exit mobile version