இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

கிறைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்று வரும் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி, 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது நாளான இன்று நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக லாதம் 52 ரன்களும், ஜேமீசன் 49 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக முகம்மது ஷமி 4 விக்கெட்களையும், பும்ரா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Exit mobile version