உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விநோதமான புத்தாண்டு மரபுகள்

புத்தாண்டு என்றாலே நாம் அனைவரும் புது வருடத்தை ஆவலோடு எதிர் நோக்கி காத்து கொண்டிருப்போம்.அப்புதுவருடத்தின் முதல் நாளில் வழக்கம் போல் புத்தாடை அணிந்து நண்பர்கள்,உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்.ஆனால் சில நாடுகளில் விநோதமாகவும், நகைச்சுவையாகவும்,புதுமையாகவும், வியக்கதகு வகையிலும் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.அவற்றை பற்றி கீழே காண்போம்.

 

1.DENMARK

நாம் அனைவரும் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதை மிகவும் பாதுகாப்பாக உடையாமல் வைத்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.ஆனால் denmark-ல் பழைய உபயோகப்படாத plate,glass போன்ற பொருட்களை அந்த வருடத்தின் டிசம்பர்31 ஆம் தேதி வரை சேமித்து வைப்பார்கள்.அதனை புத்தாண்டு அன்று நண்பர்கள்,உறவினர்களுடன் சேர்ந்து சுவற்றில் வீசி உடைத்து புத்தாண்டை கொண்டாடுவார்கள். ’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற வாசகத்தை தான் இவர்களும் பின்பற்றுகிறார்கள்.

2.SPAIN

நிச்சமயமாக சாப்பாடு என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.அதில் முக்கியமாக அனைவரும் விரும்புவது பழங்கள் என்று கூறினால் மிகையாகாது.இங்கே புத்தாண்டு அன்று 12 grapes களை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்,அப்படி சாப்பிட்டு விட்டால்,அந்த புது வருடத்திற்கான நல்ல நேரம் கிட்டியதாக நம்புகின்றனர்.இவர்களின் நம்பிக்கை நிச்சயமாக விநோதமானது தான்.

 

3.JAPAN

புத்தாண்டு அன்று எல்லோரும் கோயிலுக்கு சென்று வழிப்படுவது வழக்கம் தான். ஆனால் இவர்கள் கோயில் மணியில் 108 முறை ஓசை எழுப்பவதன் மூலம் அவர்களின் கவலைகளையும், ஆசைகளையும் தூய்மைப்படுத்துவதாக நம்புகின்றனர்.இதன் மூலம் புத்தாண்டையும் வரவேற்கின்றனர்.

4.SWITZERLAND

குழந்தைகள் என்றாலே Ice cream தான் மிகவும் விரும்புவார்கள்.அதிலும் அவர்கள் வாங்கிய ice cream கீழே விழுந்து விட்டால் அவர்களின் அழுகையை நிறுத்துவது மிகவும் கடினம்.இதற்கும் புத்தாண்டிற்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்கிறீர்களா…சம்மந்தம் இருக்கிறது…switzerland-ல் புத்தாண்டு அன்று ice cream களை வாங்கி அவற்றை நோக்கத்தோடு தரையில் போடுவார்கள்.அவ்வாறு செய்தால் வாழ்க்கையில் செழிப்பினை உண்டாக்கும் என்பதே இவர்களின் நம்பிக்கை.மிகவும் புதுமையான புத்தாண்டு கொண்டாட்டம் இதுவே.

5.FRANCE

France நாட்டினர் ’உண்டு மகிழ்வதே உண்மையான மகிழ்வு’ என கருதுகின்றனர்.எனவே, இவர்கள் புத்தாண்டை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஒன்றாக அமர்ந்து விருந்து உணவுகளை உண்டு வரவேற்கின்றனர்.மகிழ்வோடு அந்த வருடத்தின் முதல் நாளை வரவேற்பது வாழ்க்கையில் நன்மையையும்,செழிப்பையும் உண்டாக்கும் என்பதே இவர்களின் நம்பிக்கை.

Exit mobile version