புத்தாண்டு இரவு மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை

மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது உணவகம், விடுதிகள், கடற்கரைப் பண்ணை வீடுகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புத்தாண்டுப் பிறப்பின் போது, ஓட்டல் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்படும் எனவும், எந்த ஓட்டல்களிலும் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மாமல்லபுரத்துக்குச் சுற்றுலா வரும் பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துணைக் கண்காணிப்பாளர் எச்சரித்தார்.

Exit mobile version