2019ம் ஆண்டு பிறந்ததையொட்டி உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் புத்தாண்டை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் உள்ள புகழ் பெற்ற விக்டோரியா துறைமுகத்தில், கண்கவர் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். இரவு முதலே துறை முகத்தில் குவியத் தொடங்கிய மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கும் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். நகரம் முழுவதும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு கண்கவர் வான வேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், ஆக்லாந்து, ஜப்பான் தலை நகர் டோக்கியோ, கொரிய நகரங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் புத்தாண்டையொட்டி மக்கள் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
வளைகுடா நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது காண்போரை வியக்க வைத்தது. வான வேடிக்கைளுடன் களைகட்டிய கொண்டாட்டத்தில் மக்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.