பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசில் இருந்து புதிய மரபணு மாற்றம் அடைந்த நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் 46 பேரின் மரபணுகளில் புதிய வகை தொற்று அறிகுறி இருப்பதாகவும், அது தடுப்பூசிகளை எதிர்க்கக் கூடியதாகவும், அதிக தொற்றும் திறன் கொண்டதாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரான்சிலுள்ள Marseille நகரில் இதுவரை புதிய வைரஸால் 12 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில் முதல் நபர் ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டுக்கு சென்று திரும்பியவர் என்றும் டிசம்பர் 10ஆம் தேதி அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பின் இந்த வைரஸ் வேகமாக பரவியதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய மரபணு மாற்ற கொரோனா வைரசுக்கு IHU என பெயரிடப்பட்டுள்ளது.
புதிய வகை வைரஸ் வேறு எந்த நாடுகளிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.