மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனா கட்சியினர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தியாதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த சிவசேனா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால், ஆட்சியில் சரிபாதி என்ற அதிகார பகிர்வு பிரச்சனையில் பாஜக – சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் ஏற்கனவே நடந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உத்தவ் தாக்கரே, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்நிலையில் தீடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான சஞ்சய் ரவுத் மற்றும் மூத்த எம்.பிக்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post