அதிமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்ட முடிவுப்படி, ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார். பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியில் வந்த திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால் அதற்கு வலுவான வேட்பாளரை ஆதரிக்க வேண்டும், அதன் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version