ஜம்மு காஷ்மீரின் பிர்பாஞ்சல் மலையில் புதிதாக பொழிந்துவரும் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபலமான முகல் சாலையும் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளது.ஆயினும் பனிப்பொழிவை காண ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர். ரஜௌரியின் புகழ்பெற்ற பிர்பாஞ்சல் மலையிலும் புதிய பனிப்பொழிவு காணப்படுகிறது. இது காண்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.