கிரிக்கெட்டில் பந்தின் வேகத்தை கணக்கிடும் புதிய ஸ்மார்ட் பந்து

கிரிக்கெட்டில் பந்தின் வேகத்தை கணக்கிட புதிய ஸ்மார்ட் பந்து அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கிரிக்கெட்டில் முடிந்தவரை தவறான முடிவுகள் எடுக்கப்படுவதை தடுக்க டெக்னாலஜியை, பயன்படுத்தி பல நவீன முறைகள் வந்துவிட்டன. அப்படியிருந்தும் கூட மிகவும் நுணுக்கமான சில விவகாரங்களில் துல்லியமான முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் உபகரணங்கள் தயாரிக்கும் கூகபரா நிறுவனம், சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்மூலம் பந்தின் வேகம், எல்பிடபிள்யூ விக்கெட் ஆகியவற்றை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறியளவிலான கீழே விழுந்துவிடாத அளவில், அதிர்வுகளை தாங்கக்கூடிய சிப் பந்தில் பொருத்தப்படும். இதன்மூலம், பந்தின் வேகம், பந்து பவுன்ஸ் ஆன பிறகு அதன் வேகம், பந்து பவுலரின் கையிலிருந்து விடுபடும்போது இருக்கும் வேகமும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். ஸ்பின் பவுலர் வீசும்போது, பந்து காற்றில் இருக்கும்போதே எந்தப்பக்கம் திரும்பும் என்பதை கணிக்க முடியும். இந்த ஸ்மார்ட் பந்துகளின் மூலம், பந்து ஸ்டம்பில் பட்டதா, உரசிச்சென்றதா என்பதையும், பந்து முதலில் பேட்டில் பட்டதா, கால்லில் பட்டதா என்பதையும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். கேட்ச் பிடிக்கும்போது எழும் சர்ச்சைகளுக்கும் இதன்மூலம் துல்லிய தீர்வை காணமுடியும் என தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட் பந்தில் உள்ளன. இந்த பந்து பிக்பேஷ் 20 ஓவர் போட்டியில் முதன்முறையாக பரிசோதனை செய்யப்படவுள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால், அதன்பின்னர் சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படும்.

Exit mobile version