முதல்முறை வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க புதிய திட்டம்

முதல்முறை வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையை விரைவாக வழங்க, தபால் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

முதல்முறை வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டையினை விரைவாக வழங்கும் வகையில், விரைவு அஞ்சல் மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்காக, 5ஆண்டுகளுக்கு தபால் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வெளி மாநிலத்தவர்களுக்கும் இதேபோன்று அடையாள அட்டை வழங்க திட்டம் உள்ளதாகவும். அவர்கள் விண்ணப்பித்தால், அதற்கான உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி, வரும் 10ம் தேதி தமிழகம் வர உள்ளார் என தகவல் தெரிவித்தார்.

 

 

Exit mobile version