பழுதடைந்த சாலைகளுக்கு மாற்றாக புதிய சாலைகள் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழுதடைந்த சாலைகளுக்கு மாற்றாக புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட அரண்மனை சாலை, காயம்பு கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. எனவே சாலைகளை சீரமைக்கவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 49 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இதையடுத்து, புதிய சாலை அமைக்க துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

Exit mobile version