தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடு அமலான நிலையில் மளிகை, காய்கறி, தேநீர் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நண்பகல் 12 மணியளவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடு அமலானது
மளிகை, காய்கறி, தேநீர் கடைகள் நண்பகல் 12 மணியோடு மூடல்
கட்டுப்பாடுகளை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் உணவு பார்சல் விநியோக்கிக்கப்படுகிறது
தமிழகம் முழவதும் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி
அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்கப்படுகிறது
தமிழ்நாடு அரசு விதித்துள்ள அறிவிப்பின் படி, டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட்டது. நேர மாற்றியமைக்கப்பட்டதால் சில இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன.
டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டது
நேரக் கட்டுப்பாட்டால் காலையிலேயே அலைமோதிய மதுப்பிரியர்கள்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான இடைவெளியுடன் பயணம் மேற்கொள்கின்றனர். இதேபோல் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
50 சதவீத இருக்கைகளுடன் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கம்
முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான இடைவெளியுடன் பயணம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கு தடை
அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் மட்டுமே அனுமதி