திருமூர்த்தி அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க புதிய திட்டம்

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில், புதிய திட்டம் அமைப்பதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பயிர்சாகுபடிக்கு ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள புதிய திட்டம் குறித்து விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நீர்வள ஆதார வளர்ச்சி குழுமத்தின் துணைத்தலைவர் இளங்கோவன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாத நிலையில், இத்திட்டத்தின் மூலம், பாசன நிலங்களுக்கு குழாய்கள் மூலம் ஓரு மண்டலத்திற்கு வழங்கப்படும் நீர் நான்கு மண்டல பாசன நிலங்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய திட்டமான சமுதாய நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் பாசன நிலங்களுக்கும் தண்ணீர் முழுமையாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version