வருவாய்த்துறைக்கு இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒப்புகைச் சீட்டு அசல் ஆவணம் திரும்பப் பெறும்போது சார்பதிவாளரால் கையொப்பமிட்டு வழங்கப்படும் என சுட்டிக் காட்டியிருக்கும் தமிழக அரசு,ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி www.eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மனுவின் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.