டெல்லியின் காவல்துறை புதிய ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அண்மையில் வடகிழக்கு டெல்லியில் இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக சிஆர்பிஎப் கூடுதல் பொது இயக்குநராக பணியாற்றி வந்த ஸ்ரீவச்தவா, டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையராக கடந்த செவ்வாயன்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போதைய காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதால், புதிய காவல் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ம் தேதி ஸ்ரீவத்சவா பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.