ஏர்டெல்லின் வைஃபை காலிங் வசதியை தொடர்ந்து ஜியோ நிறுவனம் வாய்ஸ் ஓவர் வைஃபை என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள போரினால் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் வைஃபை காலிங் வசதியை அறிமுகப்படுத்தி அதனை நெட்வொர்க் இல்லாத இடத்திலும் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து ஜியோவிலும் வாய்ஸ் ஓவர் வைஃபை என்ற சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அதாவது மோசமான சூழ்நிலைகளில் சிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய இணைப்பு இருந்தால்,அவர்கள் வாய்ஸ் ஓவர் வைஃபை வசதியை பயன்படுத்தி தங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சோதனை முறையில் பயன்பாட்டில் இருக்கும் இந்த சேவை விரைவில் பயன்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஏர்டெல் நிறுவனத்தை போன்று எந்த மொபைல்களில் இது செயல்படும், இதற்கான கட்டணம் அல்லது டேட்டா அளவு குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.