இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு புதிதாக 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 83ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தினமும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 150 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 31ஆயிரத்து 507 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 36 லட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 16 கோடியே 49 லட்சத்து 73 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.