2022 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முடிவில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான இடங்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதகவும், 2022-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது, பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால், அப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பல்வேறு தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதால், எம்.பி.க்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்த படியே பல்வேறு தகவல்களையும் உடனடியாக பெற முடியும் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.