புதிய நகராட்சி நிர்வாக அலுவலகம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை எம்.ஆர்.சி. நகரில் புதிய நகராட்சி நிர்வாக அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை சாந்தோம் சாலையில் உள்ள எம்.ஆர்.சி. நகரில் 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் தரைதளம் உட்பட 11 மாடிகளை உள்ளடக்கியது. இதில் இரண்டு மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூரட்சிகளின் நிர்வாக அலுவலகங்கள் செயல்பட உள்ளன.

கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக உள்ளாட்சித் துறை சார்ந்த நபர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version