நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

17வது மக்களவை கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக எம்.பி.க்கள் உள்பட புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்தநிலையில் புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், வரும் 5ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version