சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப ரஷ்யா ‘Skybot F-850’ என்ற புதிய மனித வடிவிலான ரோபோவை தயார் செய்துள்ளது.
ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ், செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் இயங்கக்கூடிய Skybot F-850 என்கிற ரோபோவை உருவாக்கியுள்ளது. தொலைவில் இருந்து கொடுக்கப்படும் கட்டளைக்கு ஏற்ப இந்த ரோபா தனது கைகளை அசைத்துக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பொருட்களைத் தானே பிடிப்பதற்கான பயிற்சியும் இந்த ரோபோவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரோபாவை ஆகஸ்டு 22ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்கலம் மூலம் அனுப்பி வைக்க உள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.