தமிழ்நாட்டில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்கலாம்
மாவட்டங்களில் உள்ள சில்லரை வியாபார கடைகளுக்கு தடை
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது.
காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள், வணிக வளாகங்கள், நகை மற்றும் ஜவுளிக் கடைகளில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
உணவகங்கள், தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகள் கொண்டு இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதி
கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், அருங்காட்சியகங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கட்டுப்பாடுக்ள விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான திரையரங்குகளுக்கு 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி
உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டுமே
திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதி
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8.00 மணி வரை மட்டுமே நடத்த அனுமதி.
மதம் சம்பந்தமான திருவிழாக்கள், கூட்டங்கள் நடத்த அனுமதி மறுப்பு
நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டுமே அனுமதி
சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் அனுமதிக்கப்படும் என்றாலும் அதில் கலந்துக் கொள்ளும் அனைவரும் பரிசோதனையும் , தடுப்பூசியும் கண்டிபாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேருக்கு மட்டுமே அனுமதி
நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும், கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவு தமிழ்நாடு அரசு கோரிக்கை