மேலும் ஒருவாரம் ஊரடங்கு – தளர்வுகள் என்ன?

கொரோனா தொற்று பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து, கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 28ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல் வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் இரண்டாம் வகையில் இடம்பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மூன்றாம் வகையில் இடம்பெற்றுள்ளன. வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும், இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களில் மளிகை, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் காலை 6 முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை அனுமதிக்கப்படும். அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்படலாம். இதர அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் கடைகள், வாகன விற்பனை மற்றம் உதிரிபாகங்கள் கடைகள், பழுது பார்க்கும் மையங்கள், காலணிகள் விற்பனை கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version