50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னையில் ஊடரங்கு தளர்வினைத் தொடர்ந்து, 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும் பின்னர் தேவையின் அடிப்படையில் நேரம் மாற்றம் செய்யப்படும் எனவும் மெட்ரோர ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் அதிகம் பயணிக்கும் உச்ச நேரங்களான காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் 5
நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version