இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தொடர்புடைய சிலர், தமிழ் மொழி மதபோதனையில் ஈடுபட்டு வருவதால், அது தமிழ்நாட்டிற்கும் அச்சுசுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து தனக்கோ தனது பாதுகாப்பு பிரிவினருக்கோ எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மறுத்துள்ளார். சிரியாவில் இலங்கையைச் சேர்ந்தோர் சிலர், பயிற்சி பெறுவது குறித்த தகவல் கிடைத்தவுடன் அதுகுறித்து விசாரணை செய்ய புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் இலங்கை அரசாங்கமே ஏற்கும் என்று குறிப்பிட்ட அவர், தீவிரவாதம் புற்றுநோய் போன்றது என்றும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க, புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.