மின் இருசக்கர வாகனம் இயங்கும் போது மின்சாரத்தை சேமிக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணினி வல்லுனர் ஒருவர்  மின் இரு சக்கர வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே  மின்சாரத்தை சேமிக்கும் புதிய கருவியைக்  கண்டுபிடித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரமேஷ் துரை என்ற கணினி வல்லுனர் மின் இருசக்கர வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே தானாக பேட்டரி மூலம் மின்சாரம் சேமிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் வாகனம் இயக்கத்தில்  இருக்கும் போதே அதன் பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மேலும், இந்த கருவி மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தால் இருசக்கரவாகனம் 35 கிலோமீட்டர்கள் அதிக மைலேஜ் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு வாகனத்தின் பேட்டரி சுமார் மூன்று ஆண்டுகள் மட்டுமே இயக்கத்தில் இருக்கும் ஆனால், இதுபோன்று தானியங்கி மின்சேமிப்புக் கருவியைப் பொருத்தினால் சுமார் 10 ஆண்டுகள் வரை பேட்டரி நிலைத்திருக்கும் என அவர்  கூறுகிறார்.

Exit mobile version