வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி

வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் புதிய வகையிலான வாக்குப்பதிவு இயந்திரத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களான ஜெபின், ஜெயச்சந்திரன், பிரதீப் குமார் ஆகிய மூவரும், வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் புதிய வகையிலான வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

ஆதார் மூலம் இணைத்து கைரேகை மற்றும் கண் ரேகை பதிவுகளை கொண்டு ஒரு நபர் எங்கிருந்தாலும், தங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்கினை பதிவு செய்யும் வகையில் இந்த இயந்திரத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர்

மேலும், வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், அருகில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் இந்த கருவியை பொருத்துவது மூலம், ஏடிஎம் இயந்திரத்தில் தங்கள் கைரேகையை வாக்காளர்கள் பதிவிட்டு, தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த புதிய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு, அவர்களை ஊக்கப்படுத்தும் வீதம் 3 பேருக்கும், தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர்செல்வி, பள்ளிக்கு நேரில் வந்து, மாணவர்களை பாராட்டி, அவர்களுக்கு ஊக்கத்தொகையினை வழங்கினார்

Exit mobile version