சிந்துசமவெளி பற்றிய புதிய தகவல்கள் ; மண்பாண்டங்களில் இறைச்சி எச்சங்கள்

சிந்துவெளி மக்கள் பன்றி மற்றும் கால்நடைகளின் மாமிசத்தை உண்டதற்கான சான்றுகள் உள்ளதாக, ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சயன்சஸ் (JOURNAL OF ARCHAEOLOGICAL SCIENCE) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உலகின் மிகப்பெரிய நகர்ப்புற நாகரிகங்களில் சிந்துசமவெளி நாகரிகம் மிக முக்கியமானது. இது நவீன பாகிஸ்தான், வடமேற்கு மற்றும் மேற்கு இந்தியா, ஆப்கானிஸ்தானின் பெரிய பகுதிகளில் பரவியுள்ளது. சிந்து நாகரிகத்தில் பல நடுத்தர அளவிலான நகர்ப்புற குடியேற்றங்களும், கைவினை உற்பத்தி மற்றும் கோட்டைகளுடன் கூடிய சிறிய குடியேற்றங்களும் காணப்பட்டன.

சிந்து நாகரிகம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சிந்துவெளி மக்கள் பன்றி மற்றும் கால்நடைகளின் மாமிசத்தை உண்டதற்கான சான்றுகள் ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சயன்சஸ் (( JOURNAL OF ARCHAEOLOGICAL SCIENCE )) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வுக் கட்டுரையில், சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களில் விலங்குகளின் எச்சம் மற்றும் கொழுப்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்றிகள், எருமை, செம்மறி மற்றும் ஆடு போன்ற விலங்குகளின் இறைச்சியும், பால் உள்ளிட்ட பொருட்களும் பீங்கான் மற்றும் மண்பாண்டங்களில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவலை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரும், முனைவருமான அக்ஷீதா சூர்யநாராயண் (Akshyeta Suryanarayan) தலைமையிலான ஆராய்ச்சிக் குழு ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது. சிந்து நகரமான ராகிகரி (Rakhigarhi), ஃபர்மனா (Farmana) மற்றும் மசூட்பூர் (Masudpur) உட்பட பல சிந்து தளங்களிலிருந்த மண்பாண்டங்களில் உறிஞ்சப்பட்ட விலங்குகளின் எச்சங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முனைவர் அக்ஷீதா சூர்யநாராயண் கூறுகையில், சிந்து மண்பாண்டங்களை ஆய்வு செய்ததில் சில முடிவுகள் மிகவும் எதிர்பாராதவையாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். எடுத்துக்காட்டாக, சிந்து குடியேற்றங்களில் பன்றிகள் போன்ற விலங்குகளின் எச்சங்கள் பெரிய அளவில் காணப்படவில்லை என்றாலும், பன்றி அல்லாத கால்நடைகளின் கொழுப்புகளின் ஆதிக்கம் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முனைவர் அக்ஷீதா சூர்யநாராயண் செய்த ஆய்வின் அடிப்படையில், சிந்துவெளி மக்கள் பன்றி மற்றும் கால்நடைகளின் மாமிசத்தை உண்டது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக, ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சயன்சஸ் (JOURNAL OF ARCHAEOLOGICAL SCIENCE) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version