புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

புதுச்சேரியில் 500 கோடி டாலர்கள் முதலீட்டில் தொழிற்சாலைகள் துவங்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி,தொழில்துறை அமைச்சர் ஷாஜகான், அரசு துறை செயலாளர், மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மொபைல் நிறுவனங்கள் மற்றும் கணினி நிறுவனங்கள் இணைந்து புதுச்சேரியில் 5 ஆண்டுகளில் 500 கோடி டாலர் முதலீட்டில் தொழிற்சாலைகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார். அதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version