இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிகரிக்க புதிய தொழில்துறை கொள்கை வகுக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் பெற்ற பிறகு மூன்றாவது முறையாக இந்த புதிய தொழில்துறை கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1956 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் இவை வகுக்கப்பட்டன.
இந்தியாவில் சில துறைகளில் அந்நிய முதலீடுகள் செய்வதில் வரம்புகள் உள்ளதால், ஆவண நடைமுறைகளுக்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதாக சர்வதேச முதலீட்டார்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இந்திய தொழில்துறை கொள்கையில் மாற்றங்கள் தேவை என்பதால் மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, புதிய கொள்கை வரைவை வகுத்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில்துறை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.