“தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை"

தமிழ்நாடு அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், “புதிய தொழில் கொள்கை” மற்றும் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இரண்டு புதிய தொழில் கொள்கைகளை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடவுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் முன்னிலையில், புதிதாக 28 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாவுள்ளன. தொடர்ந்து, ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டையும் முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், நான்கு சிப்காட் மற்றும் ஆறு டிட்கோ தொழிற் பேட்டைகளின் கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

 

Exit mobile version