சிவகார்த்திகேயன் படத்துக்கு புது ஹீரோயின்…

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரன்  இயக்கவுள்ளார். படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகியாக கல்யாணி பிரியன் நடிக்கிறார். இவருக்கு தமிழில் இது முதல் படம் ஆகும். படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Exit mobile version