கடற்படையின் வல்லமையை அதிகரிக்கும் புதிய ஹெலிகாப்டர்கள்

கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிடமிருந்து புதிய வகை ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், எதிரிகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையிலும் புதிய வகை ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக அமெரிக்காவின் சிகோர்ஸ்கை எம் எச் 60 ஹெலிகாப்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களை போர் கப்பல்களிலிருந்தும் விமானம் தாங்கி கப்பல்களிலிருந்தும் இயக்க முடியும். ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள்,17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட உள்ளன. தற்போது கடற்படையில் பயன்படுத்தப்படும் சீகிங் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இந்தப் புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.

Exit mobile version