தருமபுரியில் , கைகளால் தொடாமலேயே கைகளை கழுவும் புதிய சானிடைசர் ஸ்டேண்ட்!

அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சானிடைசர் ஸ்டேண்ட்டில் உள்ள கம்பியை காலால் அழுத்தினால் சானிடைசர் கைகளில் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சார் ஆட்சியர் பிரதாப் முன்னிலையில், சானிடைசர் ஸ்டேண்டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 800 ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சானிடைசர் ஸ்டேண்டை, அரூரில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version