வாகன சோதனையின் போது சிறப்பு உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே அபராதம் வசூலிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து விதியை மீறுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற குழப்பம் நிலவிவந்தது. இந்தநிலையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே, வாகன தணிக்கையிலும், அபராதம் வசூலிப்பதிலும் ஈடுபட வேண்டும் என திருத்தி அமைக்கப்பட்ட அரசாணையை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டு உள்ளார். போக்குத்து துறையின் கீழ் உள்ள சோதனை சாவடிகள் தவிர மற்ற இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.