ஜம்மு காஷ்மீர், லடாக், மிசோரம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர்கள் நியமனம் குறித்து, குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்முவும், லடாக் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, மிசோரம் மாநில ஆளுநராக பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.