உதகையில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்

நீலகிரி மாவட்டம் உதகையில் 30 கிராமங்கள் பயன்பெறும் வகையில், சுமார் 14 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். உதகையில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 392 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 47 ஆயிரத்து 931 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 4 ஆயிரத்து 357 மகளிருக்கு 92 கோடியே 40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் 30 கிராமங்கள் பயன்பெறும் வகையில், சுமார் 14 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள 50 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.

Exit mobile version