சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு பாலத்தின், நிறைவுபெற்ற பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த 2015ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் ரூ.441 கோடி மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. மேம்பால கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக ராமகிருஷ்ணா சாலை முதல் அழகாபுரம் காவல் நிலையம், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன.
இதையடுத்து இரண்டு அடுக்கு பாலத்தை திறக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.