புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பிடித்துள்ளதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.