புதிய கல்வி கொள்கை தொடர்பாக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக முடிவு எடுக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை 1,500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓராண்டுக்குள் 3 ஆயிரம் குழுக்களாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளநிலையில், இதுதொடர்பாக வரும் 21ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்க உள்ள நிலையில், அவர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்றபடி, புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.