சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் நரிக்குறவர் வீட்டில், ஸ்டாலின் உணவருந்திய வீடியோ வைரலாகும் நிலையில், புதுத் தட்டு, புது டம்ளர், புது பாத்திரம், ஆனாலும் அதே சீருடை. அப்புறம் அது எந்த கடை டிபன் சார் என்று நெட்டீசன்களும், கலாய்த்து வருகிறார்கள்.
நரிக்குறவர் இன மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் தங்கள் சமூகத்தின் கல்வி நிலை குறித்து, சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் அந்த மாணவிகளை தலைமைச் செயலகம் வரவழைத்து பேசினார்.
பின்னர் அவர்கள் வசிக்கும் திருமுல்லைவாயில் பகுதியில், அமைச்சர் நாசர் மூலமாக வீடியோகால் மூலம் உரையாடினார். அப்போது அந்த மாணவிகளிடம், வீட்டுக்கு உணவருந்த வருவதாக தெரிவித்தவர், சொன்னபடி அங்கு சென்றார்.
ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அந்த வீடு பளீச் என்று இருந்தது. அங்கு புத்தம் புது டம்ளரில் காபி சாப்பிட்டவர், அப்படியே இட்லி, கறிக்குழம்பு என்று புதிய பாத்திரங்களில் இருந்த உணவை தானும் உண்டு, மாணவிகளுக்கும் ஊட்டி மகிழ்ந்தார்.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, பள்ளி விடுமுறையிலும் மாணவிகள் சீருடையில் இருந்து வரவேற்றது குறித்து, அதே துணி, அதே கடை, அதே வாடகை, இன்னும் கால்சீட் முடியல போல, என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
அதேபோல், புது டம்ளர், புது தட்டு, நீங்க கலக்குங்க ஸ்டாலின், என்று விளம்பர வாசகத்தை உல்டா செய்தும் கலாய்த்து வருகின்றனர்.
எல்லாம் ஒரு விளம்பரம்தான் என்று கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் பேசும் வசனத்தையும் நெட்டிசன்கள் துணைக்கு சேர்த்துக் கொண்டுள்ளனர்.