முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளது.

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லை பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாக கூறி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு 136 அடியாக குறைத்தது.

இதனிடையே அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தை காரணமாகக் கூறி, தற்போதுள்ள அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள 7 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

புதிய அணை கட்டும் ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் எனவும் சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்பிக்கவும் தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version