3,5,6 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் : தமிழக அரசு ஆணை

3ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை 2019-20ம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட நூல்களை உருவாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2020- 21ம் கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வகுப்புகளுக்குரிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு புத்தக வடிவமைப்பு பணியில் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, 2020-21ம் கல்வியாண்டுக்கு பதிலாக வரும் 2019-20ம் கல்வியாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது.

Exit mobile version